close
Choose your channels

தனுஷ் பட டிரைலரை வெளியிடுவது சிம்புவா? ஒரு ஆச்சரிய தகவல்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்தாலும் திரையுலகை பொறுத்தவரை இருவரும் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர் என்பதும் இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனுஷ் நடித்த திரைப்படத்தின் டிரைலரை சிம்பு வெளியிட உள்ளதாக கூறப்படும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ் நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’. இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளது

முதல்கட்டமாக இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த டிரைலரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த மறைமுக அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் திரைப்படத்தின் டிரைலரை சிம்பு வெளியிடுவது உறுதி செய்யப்பட்டால் இரு தரப்பு ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.