close
Choose your channels

வர்றேன், திரும்ப வர்றேன்: சிம்புவின் 'மாநாடு' டிரைலர்

Friday, November 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், எஸ்.ஜே சூர்யாவின் வில்லத்தனமான காட்சிகள், முதலமைச்சர் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மற்றும் மாநாடு காட்சிகள் ஆகியவை பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த டிரைலருக்கு பிறகு இந்த படம் மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக வர்றேன், திரும்ப வர்றேன், இந்த மாநாட்டை நடக்க விடமாட்டேன் ஆகிய வசனங்கள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். அதேபோல் எஸ்.ஜே சூர்யாவின் அதிரடி வில்லத்தனம் இந்த படத்தில் அனைவராலும் ரசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, ரிச்சர்ட் நாதனின் அபாரமான ஒளிப்பதிவு, பிரவீண் கச்சிதமான படத்தொகுப்பு என இந்த படம் அனைத்து தொழில்நுட்ப துறையிலும் பாசிட்டிவ்வாக உள்ளது.

மொத்தத்தில் ’மாநாடு’ திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.