close
Choose your channels

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்: கமல் பட இயக்குனரின் பதிவு

Monday, May 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம் திரைப்படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்திசுரேஷ் அபாரமாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் யாரும் கீர்த்திசுரேஷை பார்க்கவில்லை என்பதும் சாவித்திரியையே உயிருடன் பார்த்ததாகத்தான் அனைவரும் கருதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவித்திரி கேரக்டரில் நடித்த கீர்த்திசுரேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் அவர்களும் கீர்த்திசுரேஷை பாராட்டியுள்ளார். பலர் என்னிடம் நீங்கள் சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டீர்களா? என்று கேட்டுள்ளார்கள். அப்போது சாவித்திரியுடன் நான் புகைப்படம் எடுக்கவில்லை, ஆனால் இப்போது எடுத்து கொண்டேன் என்று கீர்த்திசுரேஷுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ளார். கீர்த்திசுரேஷூக்கு இதைவிட பெரிய பாராட்டு தேவையில்லை என்பதே உண்மை

கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், பேசும் படம், உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் இந்த சிங்கீதம் சீனிவாசராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.