close
Choose your channels

சூப்பர் ஹிட் காமெடி படத்தின் 2ஆம் பாகத்தில் மிர்ச்சி சிவா

Sunday, July 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்ப்படம்' கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் பெரிய நடிகர் முதல் சின்ன நடிகர் வரை அனைத்து நடிகர்களின் படங்களையும் சிவா கலாய்த்திருப்பார். காமெடியை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டதால் யாரும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ். அமுதன், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். அதேபோல் முதல் பாகத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் முழுதகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.