close
Choose your channels

படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடிய “டான்“ நடிகர்… வைரல் புகைப்படம்!

Wednesday, February 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் “டான்“ திரைப்படத்திற்காக படப்பில் கலந்து கொண்டு இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அப்படக் குழுவினருடன் கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி உள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்“ மற்றும் “டாக்டர்“ என இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்நிலையில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் “டான்“ படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இது இவருடைய 19 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொக்டசனும் இணைந்து தயாரித்து வருகிறது. இதன்  முதற்கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி 2 முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்நிலையில் இவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் #HBDPrinceSivaKarthikeyan என்ற ஹேஷ்டேக்குடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.