close
Choose your channels

மூன்றாவது முறையும் அதே இடத்தில்.. சிவகார்த்திகேயனின் மாஸ் திட்டம்..!

Saturday, June 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மாவீரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் புரோமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியீட்டு விழாவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் ’பிரின்ஸ்’ படங்களின் இசை வெளியீட்டு விழா இதே கல்லூரியில் நடந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இந்த கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மாவீரன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ள 'மாவீரன்’ படத்தில் மிஷ்கின், யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.