close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்..!

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் தேசிய விருது பெற்ற ’மண்டேலா’ என்ற படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையை ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோவின் சமூக வலைதலை பக்கத்தில் வெளியாகி உள்ளதை அடுத்து திரையரங்கு வெளியிட்டிற்கு பின்னர் இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை பக்ரீத் விடுமுறை நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், சுனில் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்து வருகின்றனர். மேலும் நடிகை சரிதா ஒரு முக்கிய குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.