close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு சென்சாரில் இருந்து கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

Tuesday, September 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.
அனைவரும் எதிர்பார்த்தபடியே இந்த படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகள் விரும்பி பார்க்கும் படம் என்பதால் 'யூ' சர்டிபிகேட் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. நர்ஸ் உள்பட வித்தியாசமான நடிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம் அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்திசுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.