close
Choose your channels

இளவயது ரஜினியை ஞாபகப்படுத்துகிறார் சிவகார்த்திகேயன்! பிரபல நடிகை

Friday, March 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'என் சுவாச காற்றே', 'நெஞ்சினிலே', 'நரசிம்மா' போன்ற தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா கோபிகர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்கின்றார். அதுதான் 'இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஆகும்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிப்பது குறித்து இஷா கோபிகர் கூறுகையில், 'இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதமே தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் ஏலியன்ஸ் குறித்த கதை. இதற்கு முன் ஏலியன்ஸ் கதை தமிழில் வந்ததாக தெரியவில்லை.

இந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு இளவயது ரஜினியை பார்த்தது போன்று தெரிகிறது. அவருடைய முகம், ஹேர்ஸ்டைல், கண்கள், கலர் ஆகியவை ரஜினியை ஞாபகப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.,
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.