close
Choose your channels

'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு!

Friday, May 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு எடிட்டர்கள் மற்றும் ஆறு ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்கள் வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு இசையமைப்பாளர்களின் பெயர்களை இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி, சீன் ரோல்டன், சாம் சிஎஸ் ஆகிய ஆறு பேர் இசையமைக்கவுள்ளனர். இந்த படம் ஆறு கதைகளை கொண்டது என்பதும் ஆறு நாயகர்கள், ஆறு நாயகிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நாளை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகவிருப்பதாகவும் இதனை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து ஆறு நாயகர்கள், ஆறு நாயகிகள் குறித்த விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.