close
Choose your channels

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுத்தி சுத்தி அடித்த நடிகர் சூரி காளை.. என்ன ஆச்சு தெரியுமா?

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் மாடு சுத்தி சுத்தி அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது என்பதும் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி கொடி அசைத்து அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் ஏராளமான காளைகளை காளையர்கள் அடக்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதியுடன் நடிகர் சூரி பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் சூரியின் மாடு களத்தில் இறங்கியது. முதலில் சூரியின் மாநாடு சுத்தி சுத்தி காளையர்களை அடித்து விரட்டிய நிலையில் அதன் பின் மீண்டும் வாடிவாசலுக்கு சென்று மீண்டும் வெளியே வந்தது. அப்போது ஒருவர் சூரியின் மாட்டை அடக்கி விட்டார். இதனை அடுத்து அவருக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.