close
Choose your channels

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவி மகளா? எந்த படத்தில் தெரியுமா?

Sunday, January 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ படத்தில் நடிக்கப் போகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’கர்ணா’ என்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பான் இந்திய திரைப்படமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரில் சூர்யா நடிகர் இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் ஜான்வி கபூர் நடிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் அதற்கு போனி கபூர் மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது சூர்யா ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி உறுதி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.