close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ!

Monday, November 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எஸ் ராஜமவுலியின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியில் தெரிகிறது என்பதும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகியோர்களின் அட்டகாசமான ஆக்ஷன் நடிப்பு மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படம் மற்றொரு பாகுபலி ஆக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவ்கான், அலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்துக்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.