close
Choose your channels

'சிம்பு 48' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்..!

Friday, February 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் இன்று வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்,.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக சிம்பு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் சற்று முன் இது குறித்து அப்டேட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ’சிம்பு 48’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் #BLOODandBATTLE என்ற ஹேஷ்டேக் இருப்பதை அடுத்து இதுதான் இந்த படத்தின் டைட்டில் ஆக இருக்குமா அல்லது கேப்ஷனாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சிம்பு, ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கிறார். சரித்திர காலத்து கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாக சிம்பு தனது உடல் நிலையை தயார் செய்தார் என்றும் அதற்காக வெளிநாடு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த இந்திய திரையுலகின் பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக இன்று மாலை அது குறித்து தகவல் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.