close
Choose your channels

என்ன ஆச்சு 'சங்கமித்ரா? சுந்தர் சியின் திட்டம் என்ன?

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் கடந்த ஆண்டு 'சங்கமித்ரா' திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியானது

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து திடீரென டைட்டில் நாயகி ஸ்ருதிஹாசன் விலக, அவருக்கு பதில் திஷா பதானி இந்த படத்தில் இணைந்தார். ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஆண்டு நடந்த நிலையில் திடீரென இந்த படம் குறித்து எந்த செய்திகளும் வெளிவரவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் 'கலகலப்பு 2' என்ற வெற்றி படத்தை இயக்கி, ரிலீஸ் செய்த சுந்தர் சி அடுத்ததாக 'சங்கமித்ரா' படத்தில் கவனம் செலுத்தியிருப்பதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 8ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைக்கதையை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.