close
Choose your channels

பிக்பாஸ் 2: பொன்னம்பலத்திற்கு ஸ்கெட்ச் போடும் பெண் போட்டியாளர்கள்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளரை கார்னர் செய்து வருவதாக அமைகின்றது. இது தற்செயலா அல்லது திட்டமிட்டா? என்பது சேனல் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் நேற்று அனந்து அவர்கள் கார்னர் செய்யப்பட்டு கலாய்க்கப்பட்ட நிலையில் இன்று பொன்னம்பலம் சிக்குகிறார் என்பது சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் யார் தலைவியாக இருந்தாலும் தானே தலைவி போல் நடந்து கொள்பவர் மும்தாஜ். இவரை பற்றி பொன்னம்பலம் தவறாக பேசிவிட்டதாக பெண் போட்டியாளர்கள் கூடி கூடி பேசி வருகின்றனர். இதனையடுத்து மும்தாஜ், தானே பொன்னம்பலத்திடம் நேரடியாக இதுகுறித்து பேசுவதாக எழுந்து செல்வது போல் இந்த புரமோ வீடியோ அமைந்துள்ளது.

நேற்று பொன்னம்பலம், 'மும்தாஜூக்காக தாஜ்மஹாலை கட்டலாம், தாஜ்மஹாலுக்காக மும்தாஜை கட்ட முடியுமா? என்ற அடித்த ஜோக் தான் இன்று சீரியஸாகியிருக்க வேண்டும் என தெரிகிறது. இருப்பினும் வழக்கம்போல் புரமோ வீடியோவில் போடும் காட்சிகள் நிகழ்ச்சியின்போது மொக்கையாகி வருவதால் என்ன நடக்குது என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.