close
Choose your channels

நல்லவனா இருந்தா அழிச்சிடுவாங்க, கெட்டது தெரிஞ்ச நல்லவனா இருக்கணும்: சுந்தர் சியின் 'பட்டாம்பூச்சி' டிரைலர்

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர்சி, ஜெய் நடிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவான ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த டிரைலரில், ‘ இந்த உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். ஒன்று நல்லவன், இன்னொன்று கெட்டவன். இவன மாதிரி ஒருத்தன் இருக்கனும்ன்னு என்று ஏங்கினால் அவன் நல்லவன், இவனே ஏன் இருக்குறான்னு நினைச்சா அவன் கெட்டவன். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நல்லவனாக இருந்தால் கெட்டவன் அழித்து விடுவான், நாம் இந்த உலகில் வாழ வேண்டுமென்றால் கெட்டது தெரிந்த நல்லவனாக இருக்க வேண்டும்’ என்று சுந்தர்சி பேசும் வசனம் இந்த டீசரில் உள்ளது.

குஷ்பூவின் அவ்னிசினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைத்துள்ள இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.