close
Choose your channels

'சூர்யா 42' படத்தின் டைட்டில் இதுவா? இந்தியில் மட்டும் வேறு டைட்டிலா?

Sunday, January 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

13 வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் சரித்திர கதை அம்சத்துடன் கூடிய திரைக்கதையாக அமைந்துள்ள நிலையில் சூர்யாவுக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் இந்த படமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’வீர்’ என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய 4 படங்களும் ’வி’ என்ற எழுத்தில் தொடங்கிய நிலையில் அவருடைய அடுத்தப் படமும் அதே எழுத்தில் தான் தொடங்குகிறதா? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுகிறது. இருப்பினும் இந்த படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்.

இந்த நிலையில் இந்த படம் தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகி வரும் நிலையில் இந்தியில் ஏற்கனவே சல்மான்கான் நடிப்பில் ’வீர்’ என்ற திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. எனவே ஹிந்தியில் மட்டும் இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்ட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.