close
Choose your channels

உங்க உரிமை என்னன்னே உங்களுக்கு தெரியலை: சூர்யாவின் அடுத்த படத்தின் டிரைலர்!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் ஒன்று ’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த படத்தின் நாயகன் மற்றும் நாயகி இரண்டு மாடுகளை தொலைத்துவிட்டு அதைத் தேடும் கதை என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது

மேலும் இந்த படத்தில் பத்திரிகையாளராக வாணிபோஜன் நடித்துள்ளார். உங்களுடைய உரிமை என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என கிராமத்து மக்களிடம் வாணிபோஜன் பேசும் ஆவேசமான வசனம் படத்தின் ஹைலைட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசில் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு சிவா சரவணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.