close
Choose your channels

இன்னொரு சிறப்பு தோற்றத்தை உறுதி செய்த சூர்யா: வைரல் புகைப்படம்!

Wednesday, June 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் சூர்யா ’ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும், அந்த ஐந்து நிமிடங்கள் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது சூர்யா உறுதி செய்துள்ளார்.

அக்ஷய் குமாருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சூர்யா வெளியிட்ட நிலையில் இந்த கெட்டப்பில் தான் அவர் ’சூரரைப்போற்று’ படத்தில் தோன்றுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அக்சயகுமாருடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியும் தனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது என்றும் சுதா கொங்கரா ’மாறா’ கேரக்டரை மிகவும் அழகாக மீண்டும் செதுக்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.