சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி படத்தின் 3ஆம் பாகத்தில் தமன்னா!
தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி படம் ஒன்றின் மூன்றாம் பாகத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
'ராஜூ காரி காதி' (Raju Gari Gadhi) என்ற ஹாரர் காமெடி படத்தின் முதல் பாகம் ஓம்கார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாகார்ஜூனா, சமந்தா நடிப்பில் வெளியாகி ஹிட்டானது
இதனையடுத்து இந்த படத்தின் மூன்றாம் பாகத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் ஹீரோவாக அஸ்வின்பாபுவும் ஹீரோயினியாக தமன்னாவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தையும் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஓம்கார் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.
ஏற்கனவே 'தேவி' உள்பட ஒருசில ஹாரர் காமெடி படங்களில் நடித்துள்ள தமன்னாவிற்கு இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது