close
Choose your channels

ஹேக்கர் கேரக்டரில் நடித்த தமன்னா: நாளை ரிலீஸ்

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்து முடித்துள்ள தொடர் ’நவம்பர் ஸ்டோரி’. இந்த தொடரின் படப்பிடிப்புகள் முடிவடைந்து மே 20ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த தொடர் நாளை வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமன்னா, ஜிஎம் குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தத் தொடரை ராமசுப்பிரமணியம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தொடரில் அனுராதா என்ற ஹேக்கர் கேரக்டரில் தமன்னா நடித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.