close
Choose your channels

'தமிழ்ப்படம் 2' ரன்னிங் டைம் குறித்த தகவல்

Monday, July 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு திரைப்படத்தை எப்படி விளம்பரம் செய்ய வேண்டும் என்பதை 'தமிழ்ப்படம் 2' படக்குழுவினர்களை பார்த்து மற்ற படங்களின் குழுவினர் கற்றுக்கொள்வது நல்லது. இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்துமே அனைவரையும் கவரும் வகையிலும் இது எந்த படத்தை அல்லது யாரை கலாய்க்கிறது என்ற சிந்தனையை தூண்டும் வகையிலும் வெளியாகி வருகிறது. இந்த நல்ல புரமோஷன் காரணமாகவே இந்த படத்தின் எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது

இந்த நிலையில் வரும் 12ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் 145 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் காமெடி படங்களுக்கான சரியான ரன்னிங் டைமை பெற்றுள்ளதும் ஒரு பாசிட்டிவ்வாக கருதப்படுகிறது

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா, கஸ்தூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் இசையமைத்துள்ளார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை 'தமிழ்ப்படம்' முதல் பாகத்தை இயக்கியுள்ள சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.