close
Choose your channels

நயன்தாராவை திருமணம் செய்ததால் விக்னேஷ் சிவனுக்கு லக் கிடையாது: நடிகை ஸ்ரீநிதி

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி ஏற்கனவே அஜித்தின் ’வலிமை’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து அஜித் ரசிகர்களின் கண்டங்களை பெற்றார். அதேபோல் சிம்புவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நயன்தாராவை திருமணம் செய்த விக்னேஷ் குறித்து அவர் கூறிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் தற்போது ஸ்பெயின் நாட்டில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி இந்த ஜோடி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து கூறவேண்டும் என்றால் உண்மையில் இந்த திருமணத்தால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது. நயன்தாராவுக்கு ஒரு தமிழ்ப்பையன் கணவராக கிடைத்துள்ளார். அவர் நயன்தாராவை நன்றாக பார்த்து கொள்வார். எனவே என்னைப் பொறுத்த வரை நயன்தாரா தான் லக்கி என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.