close
Choose your channels

10 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பாவனிரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா? கிளாமர் புகைப்படங்கள் வைரல்..!

Wednesday, April 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


10 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பாவனிரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா? கிளாமர் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பாவனிரெட்டியின் 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் தெலுங்கு ஹிந்தி திரையுலகில் நடிகையாக இருந்தவர் பாவனிரெட்டி என்பதும் குறிப்பாக தமிழில் ’வஜ்ரம்’ ’ஜூலை காற்றில்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் தெரிந்ததே. அதன் பிறகு தொலைக்காட்சி பக்கம் சென்ற பாவனிரெட்டி ’பாசமலர்கள்’ ’ராசாத்தி’ ‘சின்னத்தம்பி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பாச மலர்கள்’ சீரியலில் நடிக்கும் போது தான் அவருக்கு பிரதீப் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது சக போட்டியாளராக இருந்த அமீர் என்பவரை பாவனிரெட்டி காதலித்து வருகிறார் என்பதும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் திரையுலகில் பாவனிரெட்டி நடித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் வெளியான அவருடைய கிளாமர் புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரல் ஆகி வருகின்றன. செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து 10 வருடங்களுக்கு முந்தைய பாவனிரெட்டியா இவர்? என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.