close
Choose your channels

மாஸ்கோ டூ சென்னை: நேரடி விமானத்தில் கிளம்பிய தல அஜித்!

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருவதாகவும் அங்கு ஒரு சில அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்காக அஜித் உள்பட படக்குழுவினர் சமீபத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த வீடியோ காட்சிகளை இணையதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’வலிமை’ படக்குழுவினர் சென்னைக்கு கிளம்பி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு வரும் நேரடி விமானத்தில் அஜித் உள்பட படக்குழுவினர் வந்து கொண்டிருப்பதாகவும் அனேகமாக நாளை அவர்கள் சென்னை வந்து அடைவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

’வலிமை’ படக்குழுவினர் சென்னை வந்ததும் ரிலீஸ் தேதியுடன் கூடிய ’வலிமை’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரிலீஸாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் அந்த போஸ்டருக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.