ஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், மிகச்சிறந்த மேட்ச் ஃபினிஷர், இந்தியாவுக்காக உலகக்கோப்பை உள்பட பல கோப்பைகளை பெற்று தந்தவர் உள்பட பல பெருமைகளுக்கு சொந்தக்கார் தல தோனி
37 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக விளையாடி வரும் தோனி தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரிலும் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலகக்கோப்பையில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தோனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் மூத்த வீரர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தோனியின் ஓய்வு குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது
அம்பத்தி ராயுடு தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ள நிலையில் தோனியின் ஓய்வு குறித்த செய்தியும் இன்றே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.