close
Choose your channels

'மாஸ்டர்' ஆடியோ விழாவில் வெளியாகவிருக்கும் மிகப்பெரிய சஸ்பென்ஸ்!

Monday, March 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளும் முடிவடைந்த நிலையில் விஜய் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருப்பதாகவும் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா சன்டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த விழாவினை தொலைக்காட்சி மூலம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 65’ படம் குறித்த அறிவிப்பு எப்போது? அந்த படத்தை இயக்குபவர் யார்? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் இந்த சஸ்பென்ஸ்க்கான பதில் ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் கிடைக்கும் என என்று கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் தனது வழக்கமான குட்டிக்கதையைக் கூறுவது மட்டுமின்றி ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் பெயரையும் விஜய் அறிவிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே தளபதி ரசிகர்களுக்கு அன்றைய தினம் இரட்டை சந்தோஷம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.