close
Choose your channels

ரஜினி, அஜித்தை அடுத்து தீபாவளி தினத்தில் 'பீஸ்ட்': விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

Tuesday, August 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் மோத உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தீபாவளி அன்று தளபதி விஜய் ரசிகர்களுக்கும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல தயாராகி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் தீபாவளியன்று ‘பீஸ்ட்’ படத்தின் பாட்டு சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் அனிருத் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் விஜய்யின் அறிமுக பாடலை தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு சரியான விருந்து என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் வரும் தீபாவளி ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.