close
Choose your channels

'விக்ரம்' பிளாஷ்பேக் காட்சியில் இந்த பிரபல நடிகை நடித்துள்ளாரா?

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பிரபல நடிகை ஒருவர் 10 நிமிட காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரபல நடிகர்கள் பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்’ . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனை இளமையாக காணபிக்க புதிய டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இதற்காக மட்டுமே 10 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சியில் 10 நிமிடங்கள் பிரபல கன்னட நடிகை ஷவானி ஸ்ரீவத்ஸவா நடித்துள்ளதாகவும் அவரது காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியும் பிளாஷ்பேக் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.