close
Choose your channels

அஜித்தின் விஸ்வாசம் டீசரின் முதல் விமர்சனம்

Wednesday, December 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துள்ள விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் 'விஸ்வாசம்' டீசர் சென்சாருக்கு சென்றது. இந்த படத்தின் டீசரை சென்சாரின்போது பார்த்த ஒரு அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒருவரி விமர்சனமாக விஸ்வாசம் டீசர் தாறுமாறு' என்று கூறியுள்ளார். மேலும் அஜித்தின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் டீசரின் முதல் விமர்சனம் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியதோடு, உடனே டீசரை பார்க்கவேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென வெளிவந்தது போல் டீசரும் திடீரென வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.