close
Choose your channels

முதல்வருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு

Wednesday, December 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் அமைச்சரவை சமீபத்தில் ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டணி வைத்து தெலுங்கானாவில் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், பிரபல நடிகையுமான குஷ்பு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 80கள் மற்றும் 90களில் நடிகை குஷ்பு, தமிழ் திரையுலகை போலவே தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகையாக இருந்தவர். பிரபல தெலுங்கு நடிகர்களான நாகார்ஜூனா, வெங்கடேஷ், ராஜேந்திரபிரசாத் போன்றவர்களுடன் நடித்தவர் என்பதால் தெலுங்கு மாநிலங்களில் குஷ்பு பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.