close
Choose your channels

'தளபதி 67' படத்தின் முதல் அப்டேட் இதுதானா? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரூ.200 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து ரூ.300 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் நடிக்கும் 67-வது படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வாரிசு’ திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என தயாரிப்பாளர் லலித் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில் தற்போது முதல் அப்டேட் என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

முதல் கட்டமாக ’தளபதி 67’ படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகும் என்றும் அதன் பிறகு ’விக்ரம்’ பாணியில் ’தளபதி 67’ படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க ’தளபதி 67’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.