close
Choose your channels

தி லெஜண்ட்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? சென்சார் சான்றிதழ் தகவல்!

Saturday, July 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவினர் உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 161 நிமிடங்கள் அதாவது 2 மணி 41 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிகச்சரியான ரன்னிங் டைம் என்பதால் இந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலகம் முழுவதும் 2,500 திரையரங்குகளில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக இந்த படம் வெளியாக உள்ளது.லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.