close
Choose your channels

செல்போன் திருடனை மடக்கி பிடித்த சிறுமி!!! வைரல் வீடியோ!!!

Wednesday, September 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்போன் திருடனை மடக்கி பிடித்த சிறுமி!!! வைரல் வீடியோ!!!

 

பஞ்சாப் மாநிலத்தில் திருடன் ஒருவன் சிறுமியைத் தாக்கியபோதும் அவனுடன் சண்டையிட்டு சாதுர்யமாகச் செயல்பட்ட சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஜலந்தர் பகுதியில் டியூசன் முடித்துவிட்டு சாலையில் சென்றுக் கொண்டிருந்த 15 வயது சிறுமி குசம் குமாரி கபூர்தலா பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் சிறுமி சாலையில் சென்று கொண்டிருக்கிறாள். இருசக்கர வாகனத்தில் இரு திருடர்கள் வேகமாக வருகின்றனர். அதில் பின்னால் இருந்த ஒருவன் சிறுமியின் கையிலிருந்த செல்போனை பிடிங்குகிறான். அப்போது சிறுமி திமிறி பிடித்து அந்த செல்போனை பறிக்க முற்படுகிறாள். இதனால் திருடன் சிறுமியை வேகமாகத் தாக்குவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்கிறான். ஆனால் சாதுர்யமாகச் செயல்பட்ட சிறுமி அந்த இளைஞனின் சட்டையை இழுத்துப்பிடித்து வண்டியில் ஏறவிடாமல் செய்கிறாள்.

இந்நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து இளைஞரைப் பிடித்து செல்போனை மீட்டு சிறுமியிடம் ஒப்படைக்கின்றனர். இச்சம்பவத்தால் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார். இக்காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியது. அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.