close
Choose your channels

விக்ரமின் மிரட்டும் நடிப்பு: 'பொன்னியின் செல்வன்' மேக்கிங் வீடியோ வைரல்!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த கட்டமாக லைகா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் சியான் விக்ரம் தனது கரிகால்சோழன் கேரக்டருக்காக டப்பிங் செய்யும் காட்சிகள் உள்ளது

திரையில் ஆவேசமாக கரிகால் சோழன் கேரக்டரில் நடித்திருந்த விக்ரம், டப்பிங்கிலும் அதே ஆவேசத்துடன் பேசிய காட்சி இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.