close
Choose your channels

வீடியோ கேம் விளையாடி 3 மில்லியன் டாலர் ஜெயித்த இளைஞர்!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

16 வயது இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாடி மூன்று மில்லியன் டாலர் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஃபார்ட்சூ வேர்ல்ட் கப் என்ற வீடியோ கேமை சுமார் 250 மில்லியன் பேர்கள் செய்து விளையாடி வருகின்றனர். இதன் இறுதிப் போட்டி சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் தகுதிபெற மட்டும் சுமார் 40 மில்லியன் வீரர்கள் பதிவு செய்திருந்தனர்

ஆனால் 50 இரட்டையர்கள் மட்டும் 100 சிங்கிளாக விளையாடுபவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இதில் பென்சில்வேனியாவை 16 வயது Kyle Giersdorf என்பவர் சோலோவாக விளையாட தேர்வு பெற்றார். 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோ கேம் விளையாடி தகுதி பெற்றிருந்தாலும் Kyle Giersdorf மட்டுமே இறுதி சுற்று வரை சென்று இந்த போட்டியை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து இவருக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இவர் தனது டுவிட்டரில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஃபாலோயர்களையும் யூடிபில் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய வெற்றியை அவரது ஃபாலோயர்களும் கொண்டாடி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.