close
Choose your channels

விஜய்க்கு அப்பாவாக நடிப்பது இந்த பிரபலமா..? 'லியோ' குறித்த ஆச்சரிய தகவல்..!

Thursday, May 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரபலம் ஒருவர் விஜய்க்கு அப்பாவாக நடித்து வருவதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும் விஜய் மற்றும் சஞ்சய் தத் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி விஜய்க்கு அப்பாவாக சஞ்சய் தத் நடித்து வருவதாகவும் மேலும் இருவரும் இந்த படத்தில் கேங்ஸ்டர் ஆக நடிப்பதாகவும் புறப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் சஞ்சய் தத் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.