close
Choose your channels

இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்: 'தலைவர் 168' குறித்து நடிகை மீனா

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ என்ற படத்தில் நடிகை மீனா நடிக்க உள்ளார் என்று வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பை சற்றுமுன் பார்த்தோம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மீனா சற்றுமுன் கூறியதாவது:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ’தலைவர் 168’ என்ற படத்தில் நான் நடிக்கப் போகிறேன். இந்த படத்தில் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடிப்பது இதுதான் முதல்முறை. அதேபோல் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதும் இதுதான் முதல்முறை. ஆனால் ரஜினி சார் அவர்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருக்கிறேன். 

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல கதை, நல்ல கேரக்டர், நான் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பாக இருக்கும். கண்டிப்பாக எனது கேரக்டரை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

இவ்வாறு நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz