close
Choose your channels

ஒரு சீனுக்காக 17 முறை காரில் அடிப்பட்டேன்… பிரபல நடிகரின் த்ரில் அனுபவம்!

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்“ ஹாலிவுட் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு கதாநாயகனாக மாறியிருக்கிறார் டாம் ஹாலந்த். இவருடைய நடிப்பில் உருவான ஆக்சன் அட்வென்சர் கலந்த த்ரில் திரைப்படம் “அன்சார்டட்“ இன்று வெளியாகி இருக்கிறது.

ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்தத் திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் டாம் ஹாலந்த் ஒரு வியப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது புதையலைத் தேடிப் போவதாக ஆரம்பிக்கும் இந்தத் திரைப்படம் படு அட்வென்சர் படமாக அமைந்திருக்கிறது.

உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றான ஒரு புதையலைக் கண்டுபிடிக்க நானும் சுல்லி சல்லிவனும் போவோம். அப்படி போகும்போது பல சண்டைக் காட்சிகள் நடக்கும். அப்படியொரு பிரம்மாண்டமான காட்சிதான் இந்த விமான ஸ்டண்ட். இந்த காட்சிக்கு முன்பு நான் ஒரு காரில் மோதுவது போன்று ஒரு காட்சி இடம்பெறும். அந்தக் காட்சிக்காக மட்டும் நான் ஒரே நாளில் 17 முறை காரில் மோதிக்கொண்டேன் என்று த்ரில்லான தனது அனுபவத்தை டாம் ஹாலந்த் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலந்த் நடித்த இந்தத் திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.