close
Choose your channels

தனுஷ் படத்தின் வில்லனாகும் தனுஷ் பட நாயகன்

Sunday, September 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா', தனுஷ் நடிக்கும் 'வடசென்னை மற்றும் மலையாள திரைப்படமான 'தரங்கம்' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இதில் 'தரங்கம்' படத்தில் டோவினோ தாமன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். தனுஷ் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக நடித்து வரும் டோவினோ, தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

ஆம், கடந்த 2015ஆம் ஆண்டில் வெளிவந்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க டோவினோ ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தில் விஜய்ஜேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

'மாரி 2' படத்தின் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் 'மாரி 2' படத்திலும் இடம்பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.