close
Choose your channels

வைரலாகும் அம்மாவுடன் த்ரிஷா இருக்கும் குழந்தை புகைப்படம்!

Saturday, August 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா என்பதும் நடிகை ஒருவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக திரையுலகில் நடித்து வருவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, அதன்பின் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தற்போதும், ‘பொன்னியின் செல்வன்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘தி ரோட்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.