close
Choose your channels

குக் வித் கோமாளியில் 2 புதிய போட்டியாளர்கள்.. ஒருவர் பிரபல நடிகரின் பேரன், இன்னொருவர் கலை இயக்குனர்..!

Thursday, April 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் கடந்த சீசன்கள் போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர், மைம் கோபி ஆகிய 10 போட்டிகள் கலந்து கொண்ட நிலையில் இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா, விஜே விஷால் , ஷெரின் ஆகிய 5 போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர்.

இந்த நிலையில் இந்த சீசனில் தற்போது இரண்டு புதிய போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஒருவர் பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் என்பவர், இன்னொருவர் கலை இயக்குனர் கிரண் என்பவர் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளனர். இது குறித்த புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா, விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, ஷிவாங்கி ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் இரண்டு போட்டியாளர்கள் இணைந்து உள்ளதால் இந்த நிகழ்ச்சி மேலும் சில வாரங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இந்த சீசனில் நான்கு ஆண் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிய நிலையில் தற்போது இரண்டு ஆண் போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளதை அடுத்து போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.