close
Choose your channels

'பத்து தல' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Thursday, April 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் நான்கு முதல் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகி வருவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அந்த வகையில் இந்த வாரம் சிம்பு நடித்த ’பத்து தல’ உட்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த படம் வெளியாகி உள்ளது. அதேபோல் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த ’தசரா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சிட்டாடல்’ என்ற இந்தி வெப்சீரியல் இன்று முதல் பிரைம் சீரிஸ் என்ற ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ‘யூ டர்ன்’ என்ற இந்தி படம் ஜீ5 ஓடிடியில், ‘வேத்’ என்ற மராத்தி படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது.

மேலும் Gurudev Hoysala என்ற கன்னட படம் ப்ரைமில், Thuramukham என்ற மலையாள திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில், Vyavastha என்ற தெலுங்கு படம் ஜீ5 ஓடிடியில்a வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.