close
Choose your channels

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் மாபெரும் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சர் பதவிக்கான பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவருக்கு முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருப்பார் என தமிழக சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அவர்கள் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.