close
Choose your channels

'பொதுவாக என் மனசு தங்கம்' ஓப்பனிங் வசூல் நிலவரம்

Monday, August 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக வரவேற்பும், வசூலும் பெற்ற படமாக 'மனிதன்' படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'பொதுவான என் மனசு தங்கம்' திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது.

இந்த படத்திற்கு சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் இணையதளங்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் திருப்தியான ஓப்பனிங் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சென்னையில் இந்த படம் 17 திரையரங்குகளில் 217 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.71,44,886 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.