close
Choose your channels

வெற்றிமாறன் படத்திற்கான சூர்யாவின் கெட்டப்? வைரலாகும் புகைப்படம்

Sunday, October 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியாகிறது

சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு வாடிவாசல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே செய்தி வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்திற்காக சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் சமீபத்தில் அவர் எங்கேயும் வெளியே செல்லாமல் அந்த கெட்டப்பை ரகசியமாக வைத்து வருவதாக கூறப்பட்டது

சூரரைப்போற்று படத்தில் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியான ரூபாய் 5 கோடியை திரையுலகினருக்கு கொடுக்கும் நிகழ்ச்சியில் கூட இதனால் தான் சூர்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நீளமாக முடி வைத்துள்ள சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதுதான் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் கெட்டப் என சமூக வலைதளங்களில் வைரலாக செய்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.