close
Choose your channels

நாளைக்கு நம்ம போட்டோ பேப்பர்ல வந்துடும்ல்ல.. வைபவ் நடித்த 'பபூன்' டிரைலர்

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான ‘பபூன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வழியாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வைபவ், அனஹா, ஜோஜு ஜார்ஜ், நரேன், ஆடுகளம் ஜெயபாலன், உள்பட பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கியுள்ளார்.

வைபவ் வெளிநாடு செல்ல இருக்கும் போது திடீரென ஏற்படும் ஒரு சோதனையும் அதனால் அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலையும் ஏற்படுவதும் அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. இந்த படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.