close
Choose your channels

'வலிமை' குறித்து போனிகபூரின் டுவிட் வைரல்!

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்றது என்பதும், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டாலும் படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் அடுத்த போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பது தெரிந்ததே. ’நாங்க வேற மாதிரி’ என்ற ஆரம்பிக்கும் இந்த சிங்கிள் பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடல் தற்போது 25 மில்லியன் பார்வையாளர்கள் என்ற சாதனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’நாங்க வேற மாதிரி’ பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதையடுத்து தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ள நிலையில் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.