close
Choose your channels

சிம்புவின் 'ரெட் கார்டு' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது.

இதன் முதல்படியாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் உருவாகிய 'ரெட் கார்டு' என்ற பாடல் நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.